ADDED : ஆக 01, 2024 06:33 AM

காரைக்கால்: கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திறப்பு விழாவில் காரைக்கால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது ஆறு, வாய்க்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கிறது.
இதனால் பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு இடங்களில் காலம் கடந்து ஆறுகள், பாசன வாய்க்கால்கள் துார்வரும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு விழா நேற்று நடந்தது.
காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன், பொதுப்பணிதுறை அதிகாரிகள் சந்திரசேகர், மகேஷ் மற்றும் டெல்டா விவசாயிகள் நல சங்கத் தலைவர் ராஜேந்திரன். அத்திபடுகை ராஜேந்திரன், ரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டு காவிரி நீரை மலர் துாவி வரவேற்றனர்.