/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'எதிர் அணி வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்' பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆவேசம்
/
'எதிர் அணி வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்' பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆவேசம்
'எதிர் அணி வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்' பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆவேசம்
'எதிர் அணி வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்' பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் ஆவேசம்
ADDED : ஏப் 13, 2024 04:26 AM
புதுச்சேரி: 'எதிர் அணி வேட்பாளரை டிபாசிட் இழக்க செய்ய வேண்டும்' என, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசினார்.
புதுச்சேரி பா.ஜ., மாநில செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர், பேசியதாவது:
முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறோம். மக்கள் குறைகளை சொல்லவில்லை. உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். உங்களுக்கு தான் ஓட்டு போட போடுகிறோம். தேர்தலுக்கு ரேஷன் கடைகளை திறந்து அரிசிபோட வேண்டும் என, கேட்கின்றனர். முதல்வரும் ரேஷன் கடைகளை திறப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
காங்., ஏதோ 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க உள்ளதாக மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு நான் உள்பட அனைவரும் தேர்தல் பணியாற்றினோம். அதனால் வைத்திலிங்கம் 2 லட்சம் ஓட்டுக்கு மேல் பெற்று வெற்றிப் பெற்றார். தனிப்பட்ட செல்வாக்கில் ஜெயிக்கவில்லை. ஆனால் அவருக்காக வேலை செய்த நாங்கள் தற்போது எந்த பக்கம் உள்ளோம் என, பாருங்கள்.
அப்புறம் எப்படி அவர் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நமது வெற்றி நிச்சயமான ஒன்றாக இருந்தாலும், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற வேண்டும். எதிர் அணி வேட்பாளர் டிபாசிட் இழக்க வேண்டும்.
வைத்திலிங்கம் ஐந்தாண்டு காலம் எம்.பி.,யாக இருந்தார். மாநிலத்திற்கு ஒரு வளர்ச்சி திட்டமும் கொண்டுவரவில்லை. மாநிலத்திற்கு ஏதும் செய்யாதவருக்கு மீண்டும் ஓட்டளித்தால், மாநிலத்திற்கு பிரயோஜனமும் இல்லை.
மக்கள் சிந்தித்து தாமரை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். மத்திய அரசுக்கும்-மாநில அரசுக்கு உறவு பாலமாக இருந்து மாநில வளர்ச்சியை மேம்படுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

