/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எதிர்கட்சி தலைவர் சிவா ஆலோசனை
/
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எதிர்கட்சி தலைவர் சிவா ஆலோசனை
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எதிர்கட்சி தலைவர் சிவா ஆலோசனை
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் எதிர்கட்சி தலைவர் சிவா ஆலோசனை
ADDED : ஜூலை 23, 2024 02:34 AM

புதுச்சேரி : வில்லியனுார் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று ஆலோசனை நடத்தினார்.
சிவா தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் சட்டப்சபையில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் செந்தில் குமார் எம்.எல்.ஏ., பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வில்லியனுார் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்தும் மழைக்காலத்திற்கு முன்பாக தூர்வாரப்பட வேண்டும், மணவெளி மல்லிகா நகர், ஜி.என்.பாளையம் பேட், ஆத்துவாய்க்கால் பேட், கொம்பாக்கம் செட்டிக்களம் ரோடு, லட்சுமி அவென்யூ வில்லியனுார் புல்வார் பகுதிகளில் கல்வெட்டு அமைத்தல், சுல்தான்பேட்டை, வினித் நகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தல்.
தேசிய நெடுஞ்சாலையில் விடுப்பட்ட பகுதிகளில் பக்க வாய்க்கால் அமைத்தல், சுல்தான்பேட்டை குளத்தை புதுப்பித்தல், வில்லியனுார் மாதா கோவில், மூர்த்தி நகர், பாண்டியன் நகர், மார்க்கெட் சாலைகளை புதுப்பித்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, மேற்கண்ட பணிகளை துரிதமாக முடிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.