/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
/
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஆக 18, 2024 04:36 AM

நடுவீரப்பட்டு : சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பண்ருட்டி அடுத்த சாத்தமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் மகன் கவிமணி,28; சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமாகதவர். இவர், கடந்த13ம் தேதி இரவு நடுவீரப்பட்டில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
சிலம்பிநாதன்பேட்டை நான்கு முனை சந்திப்பில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
அதில் படுகாயமடைந்த கவிமணி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன் வந்தனர். அதையடுத்து, கவிமணியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த கவிமணி உடலுக்கு அரசு சார்பில் கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா, பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,ரவிச்சந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

