ADDED : மே 02, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கடலுார், ஆல்பேட்டையில் ஆனந்தம் சில்க்ஸ் சார்பில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 9 நவீன கண்காணிப்பு கேமரா வசதியுடன், புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு, திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, டி.எஸ்.பி., பிரபு தலைமை தாங்கினார். புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ஆனந்தம் சில்க்ஸ் பொது மேலாளர் ராஜகுரு, கிளை மேலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளரான எஸ்.பி., ராஜாராம், புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் ஊழியர்கள், போலீசார் பங்கேற்றனர்.

