ADDED : மார் 25, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஓவியம் மன்றம், ஓவியப்பள்ளி இணைந்து மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தியது.
புதுச்சேரி துய இருதய ஆண்டவர் உயர்நிலைப் பள்ளியில் ஓவியர் செல்வம் எமில் தலைமையில் போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்பள்ளி ஆசிரியர்கள், காச நோய் திட்ட மருத்துவர், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓவியப் போட்டியில், மாணவர்கள் கலந்து கொண்டு, காச நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் ஓவியங்கள் வரைந்தனர்.
ஓவியர்கள் ராமலிங்கம், கார்முகிலன், யோகேஸ்வரி, வசந்தி, விஜய சங்கரி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த ஒவியங்களை தேர்வு செய்தனர். சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

