ADDED : ஜூலை 20, 2026 08:03 PM
: அரியாங்குப்பம்: சுராஸ் ஆர்ட் அகாடமி சார்பில் 3ம் ஆண்டு மாணவர்கள் ஓவிய கண்காட்சி நடந்தது.
அரியாங்குப்பம் சுராஸ் ஆர்ட் அகாடமி சார்பில் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் அரியாங்குப்பத்தில் ஓவியக் கண்காட்சி கடந்த 15ம் துவங்கி 19ம் தேதி வரை நடந்தது.
5 வயது முதல்15 வயதுடைய மாணவர்கள் இயற்கை காட்சிகள், சுற்றுச்சூழல் தொடர்பான ஓவியம் மற்றும் பென்சில் மற்றும் பேனா, கண்ணாடி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
கண்காட்சி நிறைவு விழாவில், சுராஸ் ஆர்ட் அகாடமி தலைவர் சுந்தரராசு வரவேற்றார். அரிக்கன் மேடு ஆர்ட் அகாடமி செயலாளர் சுகுமாரன் நோக்க உரை ஆற்றினார். அரியாங்குப்பம் விவசாய கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் அசோக் ராஜா, பா.ஜ., வட்டார தலைவர் வசந்த ராஜா, மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு இளைஞர் அணி தலைவர்ஆதவன், மயூரி நாட்டிய ஆலயா நிறுவனர் முருகன் மருத்துவர் அறிவு கடல் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் துணை முதல்வர் நாகப்பன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.
ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
