ADDED : ஜூலை 20, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கதிர்காமம் கெங்கையம்மன் கோவிலில் 108 பால்குட அபிேஷகம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி, கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள கெங்கையம்மனுக்கு உலக நன்மைக்காக 108 பால்குட அபிேஷகம் மற்றும் பொன் ஊஞ்சல் உற்வசம் வரும் 26ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 8 மணிக்கு 108 பால்குடங்கள் கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, மாவட வீதி வழியாக வலம் வந்து, காலை 9 மணிக்கு கெங்கையம்மனுக்கு பாலபிேஷகம், கலாசபிேஷகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கெங்கையம்மனுக்கு பொன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இளங்குமரன் மற்றும் பால் குட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
