ADDED : ஜூலை 20, 2026 07:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி விடுதியில், டெய்லர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்தவர், கோவிந்தராஜ்,56; டெய்லர். டில்லியை சேர்ந்த ரிஷிகாந்த்,43; பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால், கோவிந்தராஜ் உடன் தமிழகம் முழுவதும் சென்று வியாபாரம் செய்து, அவருக்கான சம்பளம் கொடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 18 ம் தேதி இரவு இருவரும் புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்தனர். பின் சிறிது நேரம் கழித்து, கோவிந்தராஜ் உடல் நிலை சரியில்லை என கூறி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு ரிஷிகாந்த் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் வழிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
