/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரியில் பழனிசாமி பிரசாரம்
/
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரியில் பழனிசாமி பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரியில் பழனிசாமி பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரியில் பழனிசாமி பிரசாரம்
ADDED : மார் 31, 2024 04:37 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து உப்பளம் துறைமுக மைதா னத்தில், பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி, பேசினார்.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஒமலிங்கம், பாஸ்கர், அசனா, அவை தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தே.மு.தி.க., மாநில தலைவர் வேலு, எஸ்.டி.பி., கட்சி பொதுச்செயலாளர் இசை உமர்பாரூக், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் பரகத்துல்லா, பொதுச் செயலாளர் சுல்தான் கவுஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சீட் பிரச்னை
அ.தி.மு.க., இணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், நேற்று நடந்த பிரசார கூட்டத்திற்கு வந்திருந்தார். ஆனால், மேடையில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட வில்லை. இதனால் மேடை ஓரமாக நின்றிருந்தார்.
இதை பார்த்த சண்முகம் எம்.பி., இருக்கை ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்தார். பின், ஒரு இருக்கை கொண்டுவரப்பட்டு அதில் வையாபுரி மணிகண்டன் அமர வைக்கப்பட்டார். மேடை எதிரில் அமர்ந்திருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர், வையாபுரி மணிகண்டனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

