ADDED : ஆக 26, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அருகில், ஆரோவில் இசையம்பலம் பள்ளி சார்பில், மாணவர்கள் சார்பில், பனை விதைகள் நடும் விழா நடந்தது.
பள்ளியில், கடந்த இரு ஆண்டுகளாக, மாணவர்களுக்கு பனை மரம் குறித்த விழிப்புணர்வு பாடத்தை, நிர்வாகிகள் சஞ்சீவ் ரங்க நாதன், அனிதா கற்றுத்தந்தனர். இந்நிலையில் இசையம் பலம், பாவேந்தர், விஜயாஞ்சலி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்களால், ஆலங்குப்பம் ஏரியை சுற்றி 1,200 பனை விதைகளை மாணவ, மாணவியர் நடவு செய்தனர்.
முன்னதாக மாணவர்கள் பனை மரத்தின் பயன்கள் குறித்து கோஷம் எழுப்பினர். மேலும், பனை மரம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக வந்தனர்.

