/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவிலுக்குள் வேன் புகுந்ததால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
/
கோவிலுக்குள் வேன் புகுந்ததால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
கோவிலுக்குள் வேன் புகுந்ததால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
கோவிலுக்குள் வேன் புகுந்ததால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
ADDED : மே 07, 2024 04:01 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம், பூவராகவசுவாமி கோவிலில் வேன் புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
அரியலூர் மாவட்டம் பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுதாகர், 42; இவர் புதிதாக வாங்கிய மாருதி சுசூகி ஈக்கோ வேனை படைப்பதற்காக நேற்று மாலை ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார்.
கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்து வாகனத்தை எடுத்தபோது, பிரேக்கிற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியதால் வேன் கோவிலுக்குள் புகுந்து மண்டப துாணில் இடித்து நின்றது. இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
வேன் கோவிலுக்குள் புகுந்ததை பார்த்த கோவில் சிப்பந்திகள் உடனடியாக காருக்குள் இருந்த சுதாகரை மீட்டனர். பின்னர் வேனை கோவிலில் இருந்து வௌியேற்றினர்.
எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சுதாகர் காயமின்றி தப்பித்தார். இச்சம்பவம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவிலுக்குள் வேன் புகுந்த சம்பவத்தால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு நிலவியது.