/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா
/
பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா
ADDED : மார் 25, 2024 04:57 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில், பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
அரியாங்குப்பம், சுப்பையா நகர் பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திர விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 17ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை, பாலமுருகன் சாமிக்கு சிறப்பு பூஜைகள், சாமி வீதியுலா காட்சிகள் நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று, பாலமுருகனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
அலகு காவடி, பால் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.அரியாங்குப்பம், எம்.எல்.எல்., பாஸ்கர் உட்பட ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

