sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

/

வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா

வேல்முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா


ADDED : மார் 26, 2024 05:07 AM

Google News

ADDED : மார் 26, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவிலில், பங்குனி உத்திர காவடி உற்சவம் நேற்று நடந்தது.

பாகூர் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவில் பங்குனி உத்திர கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி உற்சவம் நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 9.00 மணிக்கு தீர்த்த குளக்கரையில் இருந்து காவடிகள் அலங்கரிக்கப்பட்டு, காவடி மற்றும் செடல் போடும் உற்சவம் நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், ஆண்கள் செடல் போட்டு, கார், வேன் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற காவடி, செடல் ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி விதியுலா நடந்தது. இன்று (26ம் தேதி) இடும்பன் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us