ADDED : ஜூலை 22, 2026 05:02 PM
புதுச்சேரி: கோரிகைகளை வலியுறுத்தி கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாண்டெக்ஸ் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பி.எம்.எஸ்., மாநில தலைவர் ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை:
பாண்டெக்ஸ் நிவனத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 67 மாதங்களாக சம்பளம் மற்றும் பணப்பலன்கள் வழங்கவில்லை. இதனால், ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணம், குடும்ப மருத்துவ செலவு உள்ளிட்ட அத்யாவசிய செலவுகளுக்கும சிரமமப்படுகின்றனர். பத்து மாத சம்பளமாவது வழங்க வேண்டும். ஈபிஎப், பணிக்கொடை வழங்கப்படவில்லை. இப்பிரச்னையில், கவர்னர், முதல்வர் தலையிட்டு முடிவு காண வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (24ம் தேதி) கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும், மேலாண் இயக்குனரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
