/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விசைப்படகுகள் அணிவகுப்பு: கவர்னர் துவக்கி வைப்பு
/
விசைப்படகுகள் அணிவகுப்பு: கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 15, 2024 05:10 AM

புதுச்சேரி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியுடன் விசைப்படகுகள் அணிவகுப்பு நிகழ்ச்சியை கவர்னர் கைலாஷ் நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுதந்திர தினத்தில் வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனை அடுத்து, புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில், (ஹர் கர் திரங்கா) இயக்கத்தின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி கடலில் படகுகளில் தேசிய கொடி கட்டி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
தேசிய கொடியுடன் அணிவகுப்பு படகு சவாரியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், 30 விசைப் படகுகள் பழைய துறைமுக பகுதியில் இருந்து புறப்பட்டு, காந்தி சிலை கடல் பகுதி வரை சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், மீன் வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், கலைப்பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் மற்றும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.