/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேரு வீதி தெற்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தம்
/
நேரு வீதி தெற்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தம்
ADDED : ஜூலை 01, 2024 06:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதியில் நேற்று இரவு முதல் தெற்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் மாற்றப்பட்டது.
புதுச்சேரி நேரு வீதியில், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் நேரு வீதியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் நேரு வீதியில் ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்த முடிவு செய்தனர். ஒருபுறத்தில் மட்டும் தொடர்ந்து வாகனங்களை நிறுத்தினால் கடைகளில் வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து, நேரு வீதியில் 6 மாதத்திற்கு ஒரு புறத்திலும், அடுத்த 6 மாதத்திற்கு மற்றொரு புறத்திலும் வாகனங்களை நிறுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நேரு வீதி வடக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. நேற்றுடன் 6 மாதங்கள் முடிந்ததால், நேற்றிரவு 12:00 மணிக்கு மேல் வாகனங்கள் நிறுத்தம் தெற்கு புறமாக மாற்றம் செய்து நடைமுறைக்கு வந்தது. அதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர்.
வரும் 6 மாதத்திற்கு தெற்கு புறத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.