/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிகளை கடத்த முயன்றதாக பரவிய வதந்தியால் மக்கள் அச்சம்
/
சிறுமிகளை கடத்த முயன்றதாக பரவிய வதந்தியால் மக்கள் அச்சம்
சிறுமிகளை கடத்த முயன்றதாக பரவிய வதந்தியால் மக்கள் அச்சம்
சிறுமிகளை கடத்த முயன்றதாக பரவிய வதந்தியால் மக்கள் அச்சம்
ADDED : மே 16, 2024 03:05 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதியில் சாலையோரம் விளையாடிய சிறுமிகளை கடத்த முயன்றதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டின் வெளியே சாலையோரம் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை, இரண்டு வாலிபர்கள் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானம் வாங்கித் தருவதாக கூறி அழைத்து கடத்த முயன்றதாக அப்பகுதி சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.
தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், சிறுமிகளை கடத்த முயன்றது தொடர்பான எந்த சம்பவமும் அங்கு நடக்கவில்லை என்பதும், சமூக வலைதளத்தில் பரவியது வதந்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.