/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி செயல்படாததால் மக்கள் அவதி
/
போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி செயல்படாததால் மக்கள் அவதி
ADDED : ஆக 27, 2024 04:04 AM
திருக்கனுார், : திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி எண் செயல்படாததால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டலோ, சட்டம் ஒழுங்கு தொடர்பான அசம்பவிதம் நடந்தலோ போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பி.எஸ்.என்.எல்.,லின் 2688435 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் செயல்பட்டு வந்த தொலைபேசி எண் கடந்த இரு தினங்களாக, 'இன்கமிங் கால்' வசதி செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பிரச்னைகள் தொடர்பாக தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறிய பிரச்னைகள் கூட பெரிய அளவிற்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவுட் கோயிங் கால் வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தகராறு செய்பவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த தொலைபேசி எண்ணிற்கான மாதத்திர பில் தொகை செலுத்தியும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதனை சரி செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் செயல்படாமல் உள்ள தொலைபேசி எண்ணை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.