/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் யாழ் அரங்கத்தில் தனிநபர் நாடகங்கள் அரங்கேற்றம்
/
வில்லியனுார் யாழ் அரங்கத்தில் தனிநபர் நாடகங்கள் அரங்கேற்றம்
வில்லியனுார் யாழ் அரங்கத்தில் தனிநபர் நாடகங்கள் அரங்கேற்றம்
வில்லியனுார் யாழ் அரங்கத்தில் தனிநபர் நாடகங்கள் அரங்கேற்றம்
ADDED : ஏப் 02, 2024 04:24 AM

புதுச்சேரி : வில்லியனுார் தட்டாஞ்சாவடி யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் சார்பில் 'தாராபாய், தீரன் சின்ன மலை' ஆகிய இரண்டு தனிநபர் நாடகங்கள் நடந்தது.
புதுச்சேரி, வில்லியனுார் தட்டாஞ்சாவடி யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் சார்பில் சங்கீத சலங்கை நாட்டியாலயா, கலையருவி தயாரித்து வழங்கிய 'தாராபாய் மற்றும் தீரன் சின்ன மலை' ஆகிய இரண்டு தனி நபர் நாடகங்கள் நடந்தது.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூகப் போராளியான தாராபாயின் வரலாற்றின் அடிப்படையில் 'தாராபாய்' எனும் நாடகத்தை ஆங்கிலத்தில் ஸ்வேதா சிவா எழுதி தனிநபர் நாடகமாக அவரே நடித்தார். இந்த நாடகத்தைப் பாக்கியலட்சுமி இயக்கியிருந்தார்.
இதேபோல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தீரன் சின்ன மலையின் போராட்ட வரலாற்றின் அடிப்படையில் 'தீரன் சின்ன மலை' எனும் நாடகத்தினைப் பாலா, தருண் ஆகியோர் எழுத பாபு இயக்கியிருந்தார்.
இந்த நாடகங்களைக் பள்ளி ஆசிரியர்கள், நாடக ஆர்வலர்கள் பலர் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியை யாழ் அரங்கின் உறுப்பினர்களான ஆரோக்கிய மரி ஸ்டெல்லா, நந்தினி மற்றும் கவியரசன் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.

