/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதியார் பல்கலைக் கூடத்தில் நிகழ்கலை, நுண்கலை திறனறி தேர்வு
/
பாரதியார் பல்கலைக் கூடத்தில் நிகழ்கலை, நுண்கலை திறனறி தேர்வு
பாரதியார் பல்கலைக் கூடத்தில் நிகழ்கலை, நுண்கலை திறனறி தேர்வு
பாரதியார் பல்கலைக் கூடத்தில் நிகழ்கலை, நுண்கலை திறனறி தேர்வு
ADDED : ஜூன் 23, 2024 05:29 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நிகழ்கலை மற்றும் நுண்கலை படிப்பிற்கான திறனறி தேர்வு நேற்று நடந்தது.
இதில், சென்டாக் வழங்கிய பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கல்லுாரியில் பெற்ற மதிப்பெண் இறுதிப்பட்டியல் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இத்தேர்வில், இளங்கலை நுண்கலை (பி.எப்.ஏ.) சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் ஓவியம், சிற்பம், பயன்பாட்டு கலை மற்றும் வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப் பட்டனர்.
இசையில், இளங்கலை, நிகழ்கலை (பி.பி.ஏ.) சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களக்கு வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தவில், நாதஸ்வரம் ஆகிய 6 சிறப்பு பிரிவுகளில் தேர்வு செய்தனர்.
பல்கலைக்கூட முதல்வர் அன்னபூரணி உட்பட பேராசிரியர்கள் திறனறி தேர்வை நடத்தினர்.