மின் தடை பிரச்னைக்கு நிரந்த தீர்வு மின்துறை செயலரிடம் வலியுறுத்தல்
மின் தடை பிரச்னைக்கு நிரந்த தீர்வு மின்துறை செயலரிடம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2026 10:34 PM
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியின் மின்தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மின் துறை செயலரிடம் நாராயணசாமி எம்.எல்.ஏ., வலியுறுத்தினர்.
உழவர்கரை தொகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்று முன்தினமும் இரவும் மின் தடை ஏற்பட்டது.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி, மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார். நள்ளிரவு 1:30 மணி வரை இப்பணியை ஆய்வு செய்த நாராயணசாமி எம்.எல்.ஏ., அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்த பின்னரே புறப்பட்டார்.
இதினிடையே மின்துறை செயலாளர் முத்தம்மாவை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்த நாராயணசாமி எம்.எல்.ஏ., உழவர்கரை தொகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்வது அரசின் கடமை. எனவே, தொகுதியின் மின் விநியோக கட்டமைப்பை உடனடியாக ஆய்வு செய்து, பழைய உபகரணங்களை மாற்றி, கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் மின்வெட்டு மீண்டும் ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வலியுறுத்தினார்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மின் துறை செயலர் முத்தம்மா உறுதியளித்தார்.
