ADDED : மார் 10, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: குருவிநத்தம் பெரியார் நகர் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு மா.கம்யூ., சார்பில், ஆதிதிராவிடர் நல இயக்குனரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது;
பாகூர் கொம்யூனுக்குட்பட்ட குருவிநத்தம் பெரியார் நகர் பகுதியில் வாழும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனைபட்டா வழங்காமல் உள்ளது. இதனால், வாடகை வீட்டில், அரசு இடத்தில் குடிசைகள் போட்டு 60க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுடுகாட்டிற்கு நிரந்தர இடம் இல்லாதால், தென்பெண்ணை ஆற்றங்கரையில் இறுதி சடங்கு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இப்பகுதி மக்களுக்கு மனைபட்டா மற்றும் வீடு கட்ட மானியம் வழங்க வேண்டும். சுடுகாட்டிற்கான இடம் தேர்வு செய்து, சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.