/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஐ.எம்., நிறுவனம் இலவச மாதிரி தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
/
பி.ஐ.எம்., நிறுவனம் இலவச மாதிரி தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
பி.ஐ.எம்., நிறுவனம் இலவச மாதிரி தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
பி.ஐ.எம்., நிறுவனம் இலவச மாதிரி தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
ADDED : ஏப் 30, 2024 05:16 AM
புதுச்சேரி: பி.ஐ.எம்., நிறுவனம் சார்பில்,ஜூனியர் கூட்டுறவு ஆய்வாளர் பணிக்கு மாதிரி தேர்வு நடத்த உள்ளதால் விண்ணப்பத்தாரர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனம் இயக்குனர் கூறியதாவது:புதுச்சேரி அரசு வரும் 30ம் தேதி ஜூனியர் கூட்டுறவு ஆய்வாளர் தேர்வு பணிக்கான போட்டித் தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வினை எழுத இருக்கின்ற புதுச்சேரி இளைஞர்களுக்கு, தேர்வினை அச்சமின்றி, வெற்றிகரமாக அணுகுவதற்குமாதிரி தேர்வுகளை பி.ஐ.எம்.,நிறுவனம் இலவசமாக நடத்த திட்டமிட்டுள்ளது.
இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அனைத்து இளைஞர்களும் இந்நிறுவனம் வழங்கும் மாதிரி தேர்வினை இலவசமாக எழுத முடியும். கடந்த முறை புதுச்சேரி அரசு நடத்திய எல்.டி சி, யு டி சி போட்டி தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகளை இலவசமாக வழங்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தேர்வினை வெற்றிகரமாக எதிர் கொள்ள வழிகாட்டியது.
அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் இந்த இலவச மாதிரி தேர்வு மாணவர்களுக்கு ஒம்.எம்.ஆர்.,விடை தாள்கள் கொண்டு நடத்தப்படும் இலவச மாதிரி தேர்வுவரும் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணி முதல் 12 மணி வரை, இ.சி.ஆர்., சாலையில் உள்ள சபரி வித்யாஷ்ரம்உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
மாதிரி தேர்வினை எழுத விருப்பமுள்ள அனைத்து இளைஞர்களும் வரும் 3ம் தேதி மாலை 8 மணிக்குள் தங்களுடைய பெயர்களை நேரடியாக சபரி வித்யாஷ்ரம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பி.ஐ.எம்., அலுவலகத்திலோ அல்லது 9043766418 என்ற எண்ணிற்குதொடர்பு கொண்டோ பதிவு செய்து கொள்ளலாம்.

