/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஏப் 22, 2024 05:12 AM

திருக்கனுார்:: வி.மாத்துார் திரவுபதியம்மன், பிடாரியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், வி.மாத்துார் கிராமத்தில் திரவுபதியம்மன், பிடாரியம்மன், மழுவேந்தியம்மன், கெங்கையம்மன் கோவில் மற்றும் ஸ்ரீலஸ்ரீ சிவராம சுவாமி மடம் உள்ளது. இக்கோவிலில், புதிதாக மகா விஷ்ணு, பஞ்ச பாண்டவர் சிலைகள் அமைக்கப் பட்டு, கும்பாபிேஷக விழா கடந்த 18ம் தேதி துவங்கியது.
பல்வேறு பூஜைகள் நடந்து வந்த நிலையில், முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 6:30 மணிக்கு மேல் திரவுபதியம்மன், பிடாரியம்மன், கெங்கையம்மன், மழுவேந்தியம்மன், சிவராம சுவாமி மடம் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

