தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேலியமேடு அரசுப் பள்ளியில் குறுங்காடு அமைக்கும் திட்டம்

சேலியமேடு அரசுப் பள்ளியில் குறுங்காடு அமைக்கும் திட்டம்

சேலியமேடு அரசுப் பள்ளியில் குறுங்காடு அமைக்கும் திட்டம்


ADDED : ஜூலை 26, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில், குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணியை மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

கல்வித் துறையின் மூலம் அளிக்கப்படும் இலவச சீருடை, ரெயின் கோட் மற்றும் குறுங்காடுகள் அமைத்தல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கி நடந்த முப்பெரும் விழாவில், அறிவியல் ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி, கல்வியின் அவசியம், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, இயற்கையை பாதுகாக்க மரக்கன்று நடுவதன் அவசியம் குறித்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மாணவர்களுக்கும் சீருடை மற்றும் ரெயின் கோட் வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகள் அமைக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழாசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்முருகன், செந்தில்குமார், புஷ்பலிங்கம், கணேசன், பெருமாள், தணிகைக்குமரன், வெரோனஸ் விஜயலட்சுமி, சித்திரைச் செல்வி, சுந்தரி, ஹேமலதா, அலவலக உதவியாளர் வரதராசு ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில், கிராம முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us