/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பசுமை புதுவை' திட்டத்தில் கடற்கரையில் மரக்கன்றுகள் நடல்
/
'பசுமை புதுவை' திட்டத்தில் கடற்கரையில் மரக்கன்றுகள் நடல்
'பசுமை புதுவை' திட்டத்தில் கடற்கரையில் மரக்கன்றுகள் நடல்
'பசுமை புதுவை' திட்டத்தில் கடற்கரையில் மரக்கன்றுகள் நடல்
ADDED : பிப் 27, 2025 07:03 AM

அரியாங்குப்பம்; மாசு கட்டுப்பாட்டு குழு சார்பில், 'பசுமை புதுவை' திட்டத்தில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில், 250 மர கன்றுகள் நடும் பணி துவங்கியது.
புதுச்சேரியில், 'பசுமை புதுவை'திட்டத்தின் கீழ், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், முதன் முறையாக கடற்கரையில், அதிக மணல் குன்றுகள் உள்ள பகுதியில், ஏழு வகையான, 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடற்கரை பகுதிகளான, சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு, புதுக்குப்பம், பனித்திட்டு, நரம்பை, பிள்ளையார்குப்பம், மணப்பட்டு, மூர்த்திக்குப்பம் ஆகிய மணல் குன்றுகள் உள்ள பகுதியில், மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதில்,சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை பகுதியில் 7 வகையான கன்றுகள் னெ மொத்தம் 250 மரக்கன்றுகள் நடும் பணியை நேற்று சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாசு கட்டுப்பாட்டுக்குழும உறுப்பினர் செயலர் ரமேஷ், அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், விபின், பாபு, இளநிலை அறிவியல் உதவியாளர் செல்வநாயகி, ஆய்வக உதவியாளர் இளங்கோ, திட்ட அதிகாரி பன்னீர்செல்வம், விமல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

