/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேலோ இந்தியா ஹாக்கி போட்டிக்கு வீரர்கள் தேர்வு
/
கேலோ இந்தியா ஹாக்கி போட்டிக்கு வீரர்கள் தேர்வு
ADDED : ஆக 25, 2024 11:41 PM
புதுச்சேரி: உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், கேலோ இந்தியா ஹாக்கி போட்டிக்கான வீரர் தேர்வு நடந்தது.
இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் திறமையான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து ஊக்கப்படுத்த கேலோ இந்தியா வளர் திறனறியும் போட்டிகள் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், கால்பந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தேர்வு நடந்தது.
தொடர்ந்து, நேற்று ஹாக்கி விளையாட்டு வீரர் வீராங்கணைகள் தேர்வு நடந்தது. இதில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9 முதல் 18 வயது வரை உள்ள 200க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை இந்திய விளையாட்டு ஆணை புதுச்சேரி மைய பொறுப்பாளர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.
இன்று 26ம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில், பளு துாக்கும் போட்டியும், 27 மற்றும் 28ம் தேதி தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடகள போட்டியும், 29ம் தேதி லாஸ்பேட்டை இந்திய விளையாட்டு ஆணையத்தில் கையுந்து போட்டியும், 30ம் தேதி கோகோ, கபடி போட்டிகள் நடக்கிறது.

