ADDED : செப் 18, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பள்ளிக்கு சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கம், கமலம் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மோகன கிருஷ்ணன், 17; முருங்கப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் சென்றார். மோகன கிருஷ்ணன் பள்ளிக்கு வரவில்லை என, பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, மாணவனின் பெற்றோர், உறவினர்கள், அவருடன் படித்த நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, முருகன் கொடுத்து புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.