தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உரிய சலவை தொழிலாளர்களுக்கு வீடு வழங்க பா.ம.க., கோரிக்கை

உரிய சலவை தொழிலாளர்களுக்கு வீடு வழங்க பா.ம.க., கோரிக்கை

உரிய சலவை தொழிலாளர்களுக்கு வீடு வழங்க பா.ம.க., கோரிக்கை


ADDED : ஜூலை 30, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை உரிய பயனாளிகளிடம் ஒப்படைக்க பா.ம.க., கிழக்கு மாநில அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு, முதலியார்பேட்டை பகுதியில் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 20 வீடுகளுடன், தொழில் செய்ய தேவையான தண்ணீர் வசதியுடன் கட்டி முடித்துள்ளது.

இந்த வீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இந்த வீடுகளுக்கு மாத வாடகை ரூ. 7,000 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானத்தில் வாழும் சலவைத் தொழிலாளர்களுக்கு இந்த வாடகை  சுமையாக உள்ளது. எனவே, அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வாடகையை குறைக்க வேண்டும்.

வீடுகள் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும். வீடுகளைப் பெறும் பயனாளிகள் அந்த வீடுகளிலேயே நிரந்தரமாக வசிப்பதை உறுதி செய்யும் வகையில், கட்டாய பதிவு செய்ய வேண்டும்.

புதுச்சேரி அரசு இந்த கோரிக்கைகளுக்கு மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து, வீடுகளை தகுதியான சலவைத் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இல்லையெனில், பா.ம.க., சார்பில், சலவை தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us