தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ம.க., செயற்குழு கூட்டம்

பா.ம.க., செயற்குழு கூட்டம்

பா.ம.க., செயற்குழு கூட்டம்


ADDED : ஜூன் 20, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் பா.ம.க.,  கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம் நடந்தது.

முதலியார்பேட்டை ராமலிங்கம் சுவாமி மடத்தில் நடந்த கூட்டத்தில் மாநில அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சத்யா, ராஜாராம், முருகன், ரவி, செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணு, மாநில மகளிர் அணி தலைவி எபெல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்ட மகளிர் அணி தலைவி சஜிதா, துணை தலைவி தேவி உட்பட பலர் பங்கேற்றனர். 

கூட்டத்தில், புதுச்சேரி முதல்வராக பொறுபேற்ற ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விதை மற்றும் இடு பொருட்கள் வழங்க வேண்டும். 

விவசாயிகள் கடன், மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் ரத்து செய்ய வேண்டும். தமிழத்தை போல, புதுச்சேரியிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேன்மொழி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us