/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஊழியர்களுக்கு பணி நியமனம் கவர்னருக்கு பா.ம.க., கடிதம்
/
அரசு ஊழியர்களுக்கு பணி நியமனம் கவர்னருக்கு பா.ம.க., கடிதம்
அரசு ஊழியர்களுக்கு பணி நியமனம் கவர்னருக்கு பா.ம.க., கடிதம்
அரசு ஊழியர்களுக்கு பணி நியமனம் கவர்னருக்கு பா.ம.க., கடிதம்
ADDED : மார் 08, 2025 04:17 AM
புதுச்சேரி: அரசு வேலையை நம்பியுள்ளவர்களுக்கு பணி நியமனம், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என, கவர்னருக்கு பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது;
கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.
பொதுப்பணித்துறை, பாப்ஸ்கோ, பாசிக், பிப்டிக் பல்வேறு அரசு கூட்டுறவு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், சட்டசபை, வேளாண் கமிட்டி, சுகாதாரத் துறை, கான்ட்ராக்ட், சாராய ஆலை, ரொட்டி பால் உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள், அரசு பணியை நம்பி கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இதனால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதித்துள்ளன. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, அரசு ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.