/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
/
போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
ADDED : ஆக 29, 2024 11:04 PM

திருக்கனூர்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், கிராமத்தில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் தகவல்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர்.
தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா பேசுகையில் கிராமப் புறங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அதனை ஒழிக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும். வெளி நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் அதன் தண்டனைகள், போக்சோ சட்டப்பிரிவு மற்றும் புதிய குற்றவியல் சட்டப்பிரிவுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

