ADDED : மார் 26, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கிருமாமம்பாக்கம் போலீசார் கொடி அணிவகுப்பு மேற்கொண்டார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு அளிப்பத்தை உறுதி செய்யும் வகையிலும், ஓட்டு அளிக்கும் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு ஆகிய பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடத்தினர்.
இதில், பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் 30க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

