/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் போலீஸ் கொடி அணிவகுப்பு
/
வில்லியனுாரில் போலீஸ் கொடி அணிவகுப்பு
ADDED : ஏப் 10, 2024 02:57 AM

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதியில் எஸ்.பி., தலைமையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு மேற்கு பகுதி எஸ்.பி., வம்சிதரெட்டி தலைமையில் வில்லியனுார் தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உளுந்துார் பேட்டையில் இருந்து வந்துள்ள தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட போலீசார் வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் உள்ளுர் போலீசாருடன் இணைந்து வில்லியனுார், ஒதியம்பட்டு, வி.மணவெளி, சுல்தான்பேட்டை, ஜி.என். பாளையம், தட்டாஞ்சாவடி, கோட்டைமேடு ஆகிய பகுதியில் கொடி அணிவகுப்பு சென்றனர்.
வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் பணிக்காக துணை ராணுவம், தமிழக போலீசார் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை வந்து தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

