/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு
/
பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு
ADDED : ஜூலை 20, 2024 04:53 AM
புதுச்சேரி: புஸ்சி வீதியில் பேனர்கள் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால், தடையை மீறி பேனர் வைப்பர்கள் மீது மாவட்ட நிர்வாகம் அளிக்கும் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர். அதன்படி, புதுச்சேரி வடக்கு மாவட்ட சப் கலெக்டர் அர்ஜூன்ராமக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் தனது எல்லைக்கு உட்பட்ட நகர பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பிறந்த நாளையொட்டி, புஸ்சி வீதி முழுதும் வரிசையாக பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. பேனர்கள் குறித்த புகைப்படத்துடன், சப்கலெக்டர் அர்ஜூன்ராமக்கிருஷ்ணன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் புதுச்சேரி திறந்த வெளி அழகுசீர்கெடுத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.