/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீஸ்: 'இண்டியா' கூட்டணி 'திடுக்'
/
ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீஸ்: 'இண்டியா' கூட்டணி 'திடுக்'
ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீஸ்: 'இண்டியா' கூட்டணி 'திடுக்'
ஆளும் கட்சிக்கு ஆதரவாக போலீஸ்: 'இண்டியா' கூட்டணி 'திடுக்'
ADDED : மார் 22, 2024 05:52 AM

காரைக்கால் : ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக இண்டியா கூட்டணி கட்சியினர் காரைக்கால் கலெக்டர் மணிகண்டனிடம் புகார் அளித்தனர்.
முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன் தலைமையில், காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டனை சந்தித்து அளித்த மனு:
லோக்சபா தேர்தல் பணியில் ஆளும் கட்சிக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுகிறது. இதற்கு தேர்தல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், 'புதுச்சேரி மாநிலத்தில் வேட்பாளர்களுக்கு தங்க காசு, பணம், மதுபானம் மற்றும் பரிசுப்பொருட்களை காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் உதவியுடன் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அரசு ஊழியர்களை பணி மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்டியா முழுதும் தி.மு.க., தேர்தல் அறிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது' என்றார்.

