/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் சென்னையில் வலம் வரும் ரவுடிகள் தேடுதல் வேட்டையில் போலீஸ் தீவிரம்

ADDED : ஜூன் 08, 2024 05:35 AM
சென்னை : சென்னையில் தொழில் போட்டியில், ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட, துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் வலம் வரும் ரவுடிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேர்ந்தவர் ரவுடி சிடி.மணி (எ) மணிகண்டன்; தாதாவன இவர், தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறித்தல், நிலம் அபகரிப்பு, போலி ஆவணம் வாயிலாக சதுப்பு நிலத்தை விற்பனை செய்து வந்தார். அவர் மீது, கொலைகள் உட்பட, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
அதேபோல, சென்னை பாரிமுனையை சேர்ந்த காக்கா தோப்பு பாலாஜி; ரவுடியான இவர் மீது கொலை, ஆள் கடத்தல் என, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவரும் கடந்த 2020, மார்ச் 3ல், காரில் சென்றபோது பின் தொடர்ந்து வந்த கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
அதிர்ஷ்ட வசமாக சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் உயிர் தப்பினர்.
இதன் பின்னணியில் இருந்த மயிலாப்பூர் சிவக்குமார் தீர்த்து கட்டப்பட்டார். வடசென்னை ரவுடி சம்பவம் செந்தில் தலைமறைவாக உள்ளார்.
முன்விரோதம் காரணமாக, சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி, சம்பவம் செந்தில், சிவக்குமார் ஆகியோரின் கூட்டாளிகள், கூலிப்படையினர், ஒருவரை ஒருவர் தீர்த்துக்கொள்ள துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் களமறங்கி இருக்கும் தகவல், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு மற்றும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ரவுடி கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'கூலிப்படையினராக செயல்படும் ரவுடிகள், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மாறி மாறி தப்பி வருகின்றனர். சென்னை முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் பிடித்து விடுவோம்' என்றனர்.