தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏ.டி.எம்., இயந்திரம் உடைப்பு போலீசார் விசாரணை

ஏ.டி.எம்., இயந்திரம் உடைப்பு போலீசார் விசாரணை

ஏ.டி.எம்., இயந்திரம் உடைப்பு போலீசார் விசாரணை


ADDED : ஏப் 28, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், ஏ.டி.எம்., இயந்திரம் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரி – கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டில் கரூர் வைசியா வங்கி கிளை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மதியம் வங்கியின் அருகே உள்ள பாரில் மது அருந்திவிட்டு வெளியே வந்த ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல், வங்கியின் ஏ.டி.எம்.,  எதிரில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது, அதில் ஒருவர் அங்கிருந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசி உள்ளார். 

அந்த கற்கள் அருகே இருந்த ஏ.டி.எம்., கதவு மற்றும் ஏ.டி.எம்., இயந்திரத்தை சேதப்படுத்தியது. இவற்றின் மதிப்பு சுமார் 1 லட்ச ரூபாயாகும். இது குறித்து வங்கி மேலாளர் பலேஷ் 45;  கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த கும்பலை தேடி வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us