ADDED : ஏப் 28, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி துாக்குக்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருவடிக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன்; டிரைவர். இவரது மனைவி அம்சவள்ளி, 36. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய ரகுராமன், தனது வருமானத்தை வீட்டிற்கு வழங்காமல் இருந்து வந்தார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் ரகுராமன் குடிப்போதையில் தனது பைக்கை கீழே போட்டு, சேதப்படுத்தி எடுத்து வந்தார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த அம்சவள்ளி, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
