/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.டி.ஐ., மாணவரை வெட்டிய வழக்கு 2 பேரிடம் போலீசார் விசாரணை
/
ஐ.டி.ஐ., மாணவரை வெட்டிய வழக்கு 2 பேரிடம் போலீசார் விசாரணை
ஐ.டி.ஐ., மாணவரை வெட்டிய வழக்கு 2 பேரிடம் போலீசார் விசாரணை
ஐ.டி.ஐ., மாணவரை வெட்டிய வழக்கு 2 பேரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 25, 2024 05:37 AM
வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் அருகே வலது கால் இழந்த அரசு ஐ.டி.ஐ., மாணவரை வெட்டிய வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பேட்டை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சரவணன், 23; மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கிறார். கடந்த 18ம் தேதி இரவு சரவணன் மற்றும் அவரது நண்பர் சந்துரு ஆகியோர் பைக்கில் விழுப்புரம் - நாகப்பட்டினம் பைபாஸ் வழியாக சென்றனர். அப்பொழுது ஏழு பேர் கொண்ட கும்பல் அதே கிராமத்தை சேர்ந்த சரவணனின் நண்பர்களான ஆகாஷ் மற்றும் விஜயபாலன் ஆகியோரை பிடித்து தாக்கியதை பார்த்து, தட்டி கேட்டனர்.
அந்த கும்பல் சரவணன் மற்றும் சந்துரு ஆகியோரை பிடித்து தாக்கியது. அதில், சந்துரு தப்பியோடினார்.
தனியாக சிக்கிய சரவணனை தாக்கி, அவரது வலது காலில் கத்தியால் குத்தினர்.
ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த சரவணனை, சிறிது நேரத்திற்கு பிறகு வந்த சந்துரு மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதனிடையே ஜிப்மர் மருத்துவர்கள் போராட்டம் காரணமாக சரியான சிகிச்சை பெறமுடியாமல் சரவணனின் வலது கால் வெட்டி அகற்றப்பட்டது.
இது குறித்து சரவணன் சகோதரர் சக்திபிரியன் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் இரு தனிப்படை அமைத்து ஏழு பேர் கொண்ட கும்பலை தேடினர்.
இந்நிலையில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடியின் கோஷ்டியை சேர்ந்த முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த இருவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.