ADDED : ஏப் 10, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : கர்ப்பிணி பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி லத்தீப் சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஷாவுல் அமீது மனைவி ஆசியாமரியம்,44; கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம்திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சைக்கு பின் அன்று மாலை வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 12.20 மணியளவில் ஆசியா மரியம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடன் அவரை ஜிப்மர் மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஆசியா மரியம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

