ADDED : மே 14, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி, மே 15–
சாலைகளில் இறந்து கிடந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மறைமலை அடிகல் சாலை, அம்மன் கோவில் சந்திப்பில் கடந்த 10ம் தேதி, 45 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். அதேபோன்று, கடற்கரை சாலையில் கடந்த 12ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
இவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எப்படி இறந்தனர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து முறையே உருளையன்பேட்டை மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
