ADDED : ஆக 12, 2024 04:57 AM

புதுச்சேரி: வங்கி தேர்வு பயிற்சி மையத்திற்கு சென்ற வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த அரங்கனுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி 52; பி.ஆர்.டி.சி., பஸ் கண்டக்டர். இவரது மூத்த மகன் அரவிந்தன், 21; பி.காம் படித்து விட்டு, வங்கி வேலைக்கான நுழைவு தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.
கடந்த 30ம் தேதி புதுச்சேரியில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை தாண்டவமூர்த்தி பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மாயமான வாலிபரை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2338876 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

