/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரைவர்கள் பற்றாக்குறை போலீஸ் புலம்பல்
/
டிரைவர்கள் பற்றாக்குறை போலீஸ் புலம்பல்
ADDED : செப் 01, 2024 03:42 AM
புதுச்சேரி போலீஸ் மோட்டார் யூனிட் துறைக்கு தேவையான கார், பைக் வாகனங்களை வாங்கி தருவது, பராமரிப்பது, வி.ஐ.பி., வருகைக்கு பாதுகாப்பு வாகனங்கள் சப்ளை செய்கிறது.
சட்டம் ஒழுங்கு பிரிவில் ஓரங்கட்டப்பட்ட ஜீப்புகள் வி.ஐ.பி., பாதுகாப்பு பணிக்கு வழங்குவதால், அதில் செல்லும் காவலர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது. வாகனங்களை பரிசோதனை செய்ய மெக்கானிக்கல் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லாததால், வாகன லாக்புக்குகளை சரிவர ஆய்வு செய்ய முடிவதில்லை.
சட்டம் ஒழுங்கு பிரிவில் குற்றவாளிகளை கைது செய்வதில் கிரைம் டீம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திருட்டு, கொலை, மோசடி என பல குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ஆந்திரா, கர்நாடகா, சென்னை என பல இடங்களில் பதுங்கி இருப்பவர்.
அவர்களை கைது செய்ய போலீஸ் டெம்போ வாகனங்களை கொண்டு செல்லும் கிரைம் போலீசாருக்கு தனி டிரைவர்கள் கிடையாது.
கிரைம் போலீசாரின் வாகனங்களில் ஏற்படும் பழுதுகளையும் உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பது கிடையாது. இதனால் கிரைம் போலீசார் வெளியூர் செல்லும் டெம்போ வாகனங்களை தாங்களே ஒருவர் பின் ஒருவாக மாறி மாறி வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு போலீசுக்கு பெரும் துணையாக பணியாற்றி வரும் கிரைம் பிரிவு போலீசாருக்கு உரிய வாகன வசதி, டிரைவர் வசதிகள் இல்லை என, புலம்பி வருகின்றனர்.