/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதராப்பட்டு, காலாப்பட்டில் போலீஸ் அணிவகுப்பு
/
சேதராப்பட்டு, காலாப்பட்டில் போலீஸ் அணிவகுப்பு
ADDED : ஏப் 15, 2024 04:00 AM

புதுச்சேரி : சேதராப்பட்டு, காலாப்பட்டு இரு இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரியில் தேர்தல் துறை அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
நேற்று கிழக்கு எஸ்.பி. லட்சுமி சவுஜன்யா உத்தரவின்பேரில், காலாப்பட்டு சப்இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில், தமிழக சிறப்பு பிரிவு போலீசார் காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பு பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சேதராப்பட்டு பகுதியில் வடக்கு எஸ்.பி. வீரவல்லவன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில், சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் புதுச்சேரி போலீசார் தமிழக சிறப்பு காவல் பிரிவினருடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

