/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புவனேஸ்வர் ரயில் பயணிகளிடம் போலீசார் திடீர் சோதனை
/
புவனேஸ்வர் ரயில் பயணிகளிடம் போலீசார் திடீர் சோதனை
ADDED : ஆக 01, 2024 06:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் கஞ்சா கொண்டுவரப்படுவதை தடுக்கும் வகையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பஸ் நிலையம், ரயில் நிலையம், பார்சல் அலுவலகங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையம் வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் மோப்ப நாய் பைரவா துணையுடன் சோதனையில் ஈடுப்பட்டனர். பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. கஞ்சா ஏதும் சிக்கவில்லை. குட்கா பான்மசாலா கொண்டு வந்த ஒடிசா மாநில வாலிபரை பிடித்து, ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர்.