/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை
/
ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை
ADDED : மே 23, 2024 05:34 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நெதர்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் ரூ. 2 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் இருந்தது. பார்சலில் புதுச்சேரி முகவரி இடம் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரிக்குள் போதை பொருள் வரும் வழிகளான கூரியர் பார்சல் குடோன்கள், வெளியூர் ரயில்களில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு, புதுச்சேரிக்கு வந்த புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் பைரவாவுடன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் உடமைகளை சோதனை செய்தபோது, சிலர் வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

