ADDED : ஜூன் 27, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், ஆறுமுகம் மற்றும் போலீசார், அரியாங்குப்பம் தனியார் கேட்ரிங் கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி சிக்குகின்றனர். அதில் இருந்து எப்படி மீள்வது குறித்து மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதை போன்று அரியாங்குப்பம் துளங்சிங்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் போலீசார் போதைப் பொருக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
