தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முத்துவாழி மாரியம்மன் கோவில் உற்சவ விழா  

முத்துவாழி மாரியம்மன் கோவில் உற்சவ விழா  

முத்துவாழி மாரியம்மன் கோவில் உற்சவ விழா  


UPDATED : ஜூன் 27, 2026 08:31 PM

ADDED : ஜூன் 27, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 08:31 PM ADDED : ஜூன் 27, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டில் உள்ள முத்துவாழி மாரியம்மன் கோவில் ஆண்டு உற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு தட்டாஞ்சாவடி தொகுதி த.வெ.க., பிரமுகர் பாஸ்கரன் அன்னதானம் வழங்கினார்.

கோவிலில் ஆண்டு உற்சவ விழாவானது கடந்த 25ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. காலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து செடல் மற்றும் ஜலம் திரட்டி சக்தி கரகம் வலம் வரும் நிகழ்வும் நடந்தன.

மதியம் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தட்டாஞ்சாவடி தொகுதி த.வெ.க., பிரமுகர் சுத்துக்கேணி பாஸ்கரன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், அறங்காவலர் குழுவினர் மற்றும் திருவிழா குழுவினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us